Karthik | Tamil | | #
சுப்புடு ‘பலான’ என்ற வார்த்தையின் வரலாற்றை தோண்டி எடுக்கப்பார்கிறார் . ஆனால், பெரியவர்கள் சொல்லும் நதி மூலம், ரிஷி மூலம் ஆகியவற்றை ஆராய கூடாது என்ற பழமொழி போல், தற்போதைய கல்லூரி அகராதியில் இருக்கும் வார்த்தைகளுக்கு மூலம் தேடுவது நல்லதா?
சைக்கிள் கேப்-இல் குருவி படத்தின் பாடலையும் பற்றி பேசுகிறார்.
இப்படி எங்காவது ‘பலான’ என்ற வார்த்தையை பார்த்தாலும்/கேட்டாலும், எதோ ஒரு கவர்ச்சி நடிகை எசகுபிசகாக உட்கார்ந்து கொண்டு கண்களில் ஏக்கத்தோடு உங்களைப் பார்த்து கண் அடிப்பது போல் தோன்றுகிறதென்றால் நீங்கள் பலான விஷயத்தில் பழுத்துப் போனவர்.
Karthik | Tamil | | #
கீத்துக்கொட்டாயில் குருவி பாட வாய்ப்பில்லை போல தெரிகிறது!
ஒன்னு விஜய் சொல்லி இருக்கனும் இல்லாட்டி, தரணி சொல்லி இருக்கனும். என்னான்னு? ATMல குத்து பத்தலைன்னு ரசிகர்கள் புலம்பறாங்கன்னு, அதான் இந்தப் படத்துல எங்கே பார்த்தாலும் குத்து.
Karthik | Tamil | | #
அம்பி தான் கல்லூரி ஆசிரியராக இருந்த காலத்தில் “பிலிம்” காட்டிய அனுபவத்தை நினைவு கூறுகிறார்.
மாதம் ஒரு கிலோ லயன் டேட்ஸ்(பேரீச்சம்பழம்) சம்பளத்துக்கு நான் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிணி மாணவர்களோடு சேர்ந்து நானும் லெக்சரர் என்ற பெயரில் நான் படித்த காலத்தில் சாய்ஸில் விட்ட பாடங்களை மறுபடி படித்து, நடத்தி கொண்டிருந்த போது நடந்த நிகழ்ச்சி இது.
Karthik | Tamil | | #
ப்ளாகேஸ்வரி-யின் விளம்பர விளக்கங்கள் (விமர்சனம்) பெரும்பாலும், விளம்பரப்படங்களை பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்களை கற்றுத்தரும்். இங்கே அவர், சென்ற ஆண்டின் மிகவும் விவாதிக்க பட்ட விளம்பர படத்தை பற்றியும்,அந்த விளம்பரப்படத்தின் அடுத்த அத்தியாயம் பற்றியும் படத்தின் இயக்குனரோடு ஒரு சந்திப்பில் தான் கற்றதை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
Karthik | Tamil | | #
கல்யாணம் ஆகியும் பிரும்மசாரி போல அம்பிக்கு படித்து பட்டம் வாங்கிய பிறகும் பரீட்சை தொல்லை விட்டபாடில்லை!!
என் ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதால், நான் படிச்சது மட்டும் தான் பரீட்சைக்கு வரும்! என நான் சொன்னதை இரண்டு ஆண்டுகள் வரை நம்பிய நண்பர்களும் உண்டு. அப்ப மூனாம் ஆண்டு என்ன ஆனது?னு நீங்க பின்னூட்டம் போடலாம். அந்த வருடம் குருபெயற்ச்சி ஆகி விட்டார் என சமாளித்து விட்டேன்.
Dubukku | Tamil | | #
இப்படி போஸ்ட் வரும்ன்னா அடிக்கடி பர்ஸ் தொலைந்து போய் திரும்பக் கிடைக்கக் கடவது
…
K750i சோனி எரிக்சன் மொபைல்
கறுப்பு ஜெல் பேனா
நான்கைந்து விசிட்டிங் கார்டுகள்
தம்பியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ராம மந்திரத்துடன் கூடிய நாமக்கல் ஆஞ்சனேயரின் படம்
டிசைனர் புடவைகளை பெட்ரோல் வாஷிற்கு கொடுத்ததற்கான ரசீது
மிளகு சைஸ் கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு அட்டை….
இன்னும் அந்த பர்ஸில் என்னவெல்லாம் வைத்திருந்தேன் என்பதை பேருந்தில் அது தொலைந்தபின் தான் அவசர அவசரமாய் யோசித்துக் கொண்டிருந்தேன்..!
…
Dubukku | Tamil | | #
அரசு பள்ளி ஒன்று தலைமையாசிரியரின் முனைப்பால் கான்வென்ட் ரேஞ்சுக்கு முன்னேறியிருப்பதைப் பற்றி வந்த தகவல்களைப் பதிந்திருக்கிறார் நல்லது நடக்கட்டும் இவன்.
இதுமாதிரி எல்லா துறைகளிலும் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
Dubukku | Tamil | | #
எக்ஸ்பீரியன்ஸை கூட்டிப் போட்டதற்காக நண்பர் ஒருவரை வேலையிலிருந்து தூக்கிவிட்டதைப் பகிர்ந்துகொண்டு, இதே ஐ.டி நிறுவனங்கள் தாங்கள் மாட்டும் வாடிக்கையாளர்களிடம் பணியாளர்களின் வேலை அனுபவம் பற்றி புளுகலாமா என்ற நியாயமான கேள்வியை முன்வைக்கிறார் சந்தோஷ்.
பின்னூட்டங்களில் காரசாரமான விவாதம் நடக்கிறது. பல நிறுவனங்களில் நடைபெறும் அவலக் கேடுகளை அடுக்கி, எந்தெந்த நிறுவன்ங்களில் ஜாக்கிரதையாக இருக்கவேன்டும் என்ற தகவல்கள் காணக்கிடைக்கின்றன.
Dubukku | Tamil | | #
அரட்டை அரங்கத்தில் கலந்து கொண்ட அனுபவத்திலிருந்து நடப்பதெல்லாம் நாடகம் என்று கிழித்து எறிந்திருக்கிறார் ஜெஸிலா
என்னுடன் பேசியவர்களில் ஒரு பெண் அவர்களுக்கு ‘ப்ரைன் டுமொர்’ இருந்த போது தன் குடும்பத்தினர் எப்படி ஒத்துழைத்தார்கள் என்று பேசி இதைவிட இந்த இடத்தில் இன்னும் உருக்கமாக்குவது எப்படி என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் ஒரு குழந்தையின் மரணத்தை பற்றி ஒத்திகையில் பேசி முடித்தவுடன் தேர்வுக்குழுவினரோ ‘அந்த இடத்தில் இன்னும் உருக்கமாக இது போல் பேசுங்கள்’ என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
நன்றி வித்தியகங்கைக்கலாப்பிரியா
Dubukku | Tamil | | #
சங்கமம் திரட்டி அறிவித்திருக்கும் வலைப்பதிவு விருதுகளுக்கு முதல் கட்ட வாக்கெடுப்பு ஆரம்பமாகிவிட்டது. முதல் வாக்கெடுப்பு 22ம் தேதி முடிவடைகிறது வாக்களித்துவிட்டீர்களா?